http://kavinjalam.blogspot.com

Poetry

Thursday, July 29, 2010

மனிதன் முகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடி !

Moon in July Night

இதோ ..இரவின் இனிய தொங்கும் கனவு 
இயற்கை தந்த  ஒப்பற்ற விடிவிளககு...
பூமி புத்திரனின் அழகாய் மின்னும் அத்தை மகள்  மினுக்கி குலுக்கி வலம் வருவதை இங்கே பாருங்கள்...
இந்தியாவின் ஏதோ ஒரு கிரிக்கெட் மைதானத்தில்
பூவா தலையா போட்டுப்பார்த்த
வெள்ளி நாணயம் ஒன்று பறந்தோடி..
விண்ணிலே போய்
ஒட்டிக்கொண்டு விட்டதை
சற்று தலை தூக்கி விண்ணில் காணுங்கள்...

வானப்புலவன் வடித்த  அந்தியின் கவிதைகளுக்கு கிடைத்த
அற்புதக் கைதட்டலா ...இந்த நிலா?

இரவு என்ற காதலன் பூமி நங்கைக்கு
கைதட்டி செய்து கொடுத்த காதல் சத்தியம் இது தானா.?..

மேலும்..
மேக மந்தைகளை மேய்த்து தினம் நம்மை  ஆசிர்வதிக்கும் நிலா ..ஒரு தேவ மேய்ப்பனா.?.

ஆயிரம் கோடி நட்சத்திரபபடைகளை முன்னின்று நடத்தி வரும்  அலெக்ஸாண்டர் இணையான அயராத போர் தளபதியா?


நிலா ஹெலன் கிளியோபாட்ரா  , ஐஸ்வர்யாராய் போன்ற ஒரு அழகியா..
உலக அழகிக்கெல்லாம் அழகியா..
இல்லையெனில்.....
..இத்தனை நட்சத்திரஙக ரசிகர்கள் இவளைப்பார்த்து
கண்ணடித்து கொண்டிருக்க காரணம் ஏது?.

வானின் வளர்ப்பு மகளோ இந்த வெள்ளி நிலா?..

மனிதன் தினம் தன் முகம் , அகம் பார்க்கும் தேவலோகக் கண்ணாடியா ?

இதோ பாருங்கள்.. ,இரவின் காட்டில் இந்த அழகிய  இளவரசி சிக்கித்  திசையின்றித் தவிப்பதை!

நிலா நித்திய கன்னிகையா
இல்லையெனில்..
எனது கொள்ளுப்பாட்டனுக்கும் , எனக்கும்
அவளே காதலியாய் ஆகியதெப்படி?

அவளை காதலித்து  மணந்து கொண்டது ..மானுடம்..
நிலா.
இந்த பிரபஞ்ச வெளியில்  பால் சொட்டும் தாயின் மார்பகம்!


நவீன் பாரதி


8 comments:

மங்கை said...

எனக்கு ஒரே சந்தோஷன் தாங்க... கவிதை புரிஞ்சது.. நம்ம அறிகுக்கு எட்டற மாதிரி எழுதி இருக்கீங்க பாருங்க.. அதுக்கே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்...

எனக்கு தெரிஞ்சது எல்லாம் நிலா நிலா ஓடிவா 'கவிதை' தான்.. அதை மிண்டும் நிறூபிச்சிட்டேன்..:)

Naveen Bharathi said...

ஆயிரம் கோடி முறை நன்றி சொல்வேன் உங்களை போன்ற மென் உள்ள்ங்களுக்கு, இருந்தாலும் நீங்கள் நிரம்பதான் அடக்கம் போங்க!

Thekkikattan|தெகா said...

இந்தக் கவிதையை நான் அஞ்சு வருஷத்திற்கு முன்னாடியே எழுதினவரேயே படிக்க விட்டு கேட்டுட்டேன் - ஞாபகமிருக்கா? வரிக்கு வரி சந்தோஷம் கொப்பளிக்க வைச்சிட்டீரு. என்ன ஒண்ணு ஐஸ்க்கு பதில வேற என்னத்தையாவது ஒப்புமை படுத்தி இருக்கலாம்.

கடைசி வரியில அருமையா முடிச்சிப் போட்டுட்டீங்க இந்த பரந்த அண்டவெளிய தாயின் மார்பகமாக்கி ... :) முடியல்ல ரேஞ்ச் - செம மச்சி!!

cheena (சீனா) said...

அன்பின் நவீன் பாரதி

கவிதை அருமை - அழகு சொட்டுகிறது - தஞ்சை நான் பிறந்த ஊர் - 13 - அருமையான சுழ்நிலை

நிலாவினைப் பற்றிய புதிய கற்பனை - கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது - கொள்ளுத் தாத்தனுக்கும் எனக்கும் ஒரே காதலியா - ஹா ஹா - கற்பனையின் உச்சம்.

இயற்கையின் விடிவிளக்கு
பூமியின் அழகிய அத்தை மகள்
மழலையரின் வெள்ளி நாணயம்
கவிதையின் பரிசு
காதல் சத்தியம்
மேய்ப்பன்
போர் வீரன்
உலக அழகி
பார்ப்பவர்கள் அனைவரும் கண்ணடிக்குக்கும் கட்டழகி
மானுடம் மணந்தவள்
பிரபஞ்சத்தின் அகண்ட மார்பு - பால் சொட்டுகிறது - குழந்தைகளுக்கு

அடடா அடடா பிரமிக்க வைக்கிறது

நல்வாழ்த்துகள் நவீன் பாரதி
நட்புடன் சீனா

Naveen Bharathi said...

அன்பு நண்பரே,

இலக்கிய நயம் சொட்டும் உங்கள் பாராட்டு ஒரு சோழர் காலத்து செப்பேடு போல் ..

ஆர்வம் கொப்பளிக்க, அதிசயம் மிக்கதாய் உள்ளது. மனம் நெகிழ்ந்து போனேன் , தொடர்ந்து ஆதரவு நல்குங்கள், நன்றி

Naveen Bharathi said...

பிரபா,

நீங்கள் தந்த நிலா புகைப்படம் நான் சொன்ன தேவலோக கண்ணாடி என்பதை அப்படியே பிரதிபலித்து நிற்கிறது..

வாழ்த்துக்கள்...

காட்டாறு said...

நிலவை கவிதை வடிக்காத கவிஞனும் இலன்; காதலிக்காத மானிடனும் இலன். காதலின் வெற்றியிலும் தோல்வியிலும் இரண்டற கலந்தவள் தானே இந்த நிலவு. கண்ணாடி என மிகச் சரியாக சொல்லி விட்டீர் கவிஞரே. நம் உளம் உரைத்திடும் நிலவு. அருமை.

பொருளில் குறையில்லை நண்பரே. சொல்லில் சிறு குறையுண்டு. அது மாணுடம் அன்று; மானுடம்.

Naveen Bharathi said...

காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது.. `நம் உளம் உரைத்திடும் நிலவு’ ஒரு ஹைக்கூ கவிதை அருமை, பெண்ணின் பெருமை . அந்த சிறு பிழைக்கு தமிழ் தட்டச்சுக்கு நான் புதிது என்பதே காரணம்.

ஆமா காட்டாறு, காவிரி மாதிரி ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறது!