http://kavinjalam.blogspot.com

Poetry

Saturday, August 7, 2010

இலைகள் இயற்கையின் கட்சி கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.அரச மரம் .. அரச மரம்…பெரிதாக வளர்ந்த மரம்.
அரசன் போலும் கம்பீரமாய் நின்று நிமிர்ந்த மரம்..
இலைகள்... இயற்கையின் கட்சிக்கொடிகள்  கொடிகள் போல் பட படக்கும் ஆயிரம்.
ஊருணித்தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.
ஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.

இதயத்தின் உருவத்தில் இலை கொண்ட கலை மரம்.
வேர்கள் இருக்கைகள் போல் வெளித்தோன்றும் நிழற் கூடம்.

மரப்பல்லி, எறும்புக்கு பறவை ,துறவியற்கு மனை போன்ற துணை மரம்
சூரியன் போலவும் நின்று ஒளிர்ந்திடும் மலை மரம்.

படை கொண்ட வேந்தனைக் கண்டு பயந்தறியா பாமரம்
பாடும் பறவைகள் அமர்ந்து பயிற்சி பெறும் கோபுரம்.

புயல் வீச்சை எதிற்கொண்டு வென்றிடும் புஜபலத் தோள் மரம்.
பிள்ளை வரம் தருவதால் இது மரங்களில் ஆண்மரம்!
கவிஞனுக்கு காதல் மரம்..
களைத்தவனுக்கு சாமரம்..
புத்தனுக்கு போதி மரம்.
ம்ற்றவற்கு கோவில் கொண்ட புனிதம்.

அரச மரம் .. அரச மரம் .. பெரிதாக வளர்ந்த மரம்...
ஊருணித் தண்ணியிலே உயிரு வளர்த்த மரம்.
ஊருப்பிள்ளைகள் ஓடி உறவாடி விளையாடும் மரம்.!

நவீன் பாரதி.

Photo Courtesy : Makka Studios

9 comments:

cheena (சீனா) said...

அன்பின் நவீன் பாரதி

அருமை - சிந்தனை அருமை - கவிதையும் நன்று

அரச் மரத்தின் சார்பினில் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Naveen Bharathi said...

அன்பு பெருந்தகையே,

அரச மரக்காற்று ஆயுளை நீட்டிக்கும் என்பார்கள்

காற்று மாசடைவதால் மனித நுரையீரல்கள்
குப்பை தொட்டிகளாய் மாறி வருகின்றன

உண்மை என்று உணர்ந்தேன் நான்..
உங்கள் கடிதங்களும் அரச மரக்காற்றினைப் போல இதமாக வீசி வந்து என்னை உற்சாகமூட்டுகின்றன...

நன்றி

Robert B Grubh said...

இறைவனின் படைப்புகளில் மகத்துவமான மரங்களில் அத்தி மர வகைகள் சிறப்பானவை. அரசமரமும் அத்தி மரத்தில் ஒரு வகையே. அதன் சிறந்த தன்மைகளை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். நன்றி.

அரசமரம், ஆலமரம் போன்ற அத்திமர வகைகளைப்பற்றி உங்கள் இயற்கை நண்பர்களிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்: அரசமரத்தின், ஆலமரத்தின் பூ எப்படியிருக்கும்?

Thekkikattan|தெகா said...

ஊருணிக் கரையில் நிற்கும் அந்த 40+ வருஷ அரச மரங்கள் சல சலக்கிற மாதிரியும்... ஊர்ந்து ஏறும் கரும் எறும்புகளின் சாரைச் சாலைகளும் என் கண் முன்னே விரிவது மாதிரியாகவும் இருக்கிறது.

கவிதையில் உயிர் இருக்கிறதப்போய்! ஆமா, இதோட பழைய வெர்சன் என்னாச்சு?

சே.குமார் said...

சிந்தனை அருமை - கவிதையும் நன்று.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படபடக்கும் அரசமரம்.. அய்யோ ஓங்கி வீசும் காத்தும் இலையோட படபடப்புமா எவ்ளோ பெரிய இடத்தை அது ராஜா மாதிரியே
தானேஆட்சி செய்யும்.. அவ்ளோ பெரிய இடத்தை சும்மா மனுசன் விட்டுவைக்கமாட்டான்னு தான் முன்னோர்கள் அதை கடவுளாக்கி நிக்கவச்சிட்டுப
்போயிருக்காங்கன்னு கூடத்தோணும்.

Naveen Bharathi said...

அன்பு முத்துலெட்சுமி

மரங்களின் அரசன் என்பதால் தான், அந்த அற்புத மரத்திற்கு அரச மரம் என்று பெயர்.

பாம்பை நம் முன்னோர்கள் கடவுள் ஆக்கியதற்கு காரணம் அதன் மேல் கொண்ட அச்சம், இடியைக் கடவுளாக்கி இந்திரன் என்ரோம்.
வந்து வாழ்த்தும் மழையைக் கடவுளாக்கி வருணன் என்ரோம்.

அரச மரத்தை கடவுளாக்கிய காரணம் It is a conservation effort என்று சொன்ன உங்களுக்கு ஓ போடலாம்.

natraj said...

dear bharath sir ,It is very nice to read ur poem; it shows the depth of ur interest on Nature and indirectly it exhibit ur affection on society
I wish to create more ...&

more..
with regards
prof.P.Natarajan...Poondi

காட்டாறு said...

அருமை அருமை. மரம் மரம் மரம் அப்படின்னு மண்டைக்குள்ள ரீங்காரம் இன்னமும். :)